உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 13, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக – கற்பிட்டி தாஹிர் நியமனம்.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட முத்து முஹம்மத் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மக்கள் காங்கிரஸ் ஊடாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவரும், வடமேல் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமாகிய என் ரீ.எம் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராகவும் வடமேல் மாகாண சபையின் உறுப்பினராகவும் இருந்து மக்களுக்கு ஆற்றிய சேவையினை பாராளுமன்றத்திற்கு சென்று அதனூடாக புத்தளம் மண்ணுக்கு தேவையான அபிவிருத்திகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கும் அதே வேளை நாட்டில் இவ்வாறானதொரு அனர்த்த நிலை ஏற்பட்டுள்ள கால கட்டத்தில் தாஹிருக்கு பாராளுமன்ற நியமனம் வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு புத்தளம் வாழ் மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தளம் மண்ணிலிருந்து தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் இரண்டாவது உறுப்பினர் என்.ரீ.எம் தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1226567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time