உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???
Post Views: 238

Share :

கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய “இலங்கையின் மத்ரஸா கல்வி” நூல் அறிமுக விழா.!!!

இலங்கையின் மத்ரஸா கல்வி நூல் அறிமுக விழா சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நேற்று (29) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் நடைபெற்றது. கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய நூலை அறிமுகப்படுத்தும் இந்நிகழ்வில், நூல் அறிமுக உரையினை ஓய்வு பெற்ற சிரேஸ்ட நிர்வாக அதிகாரியும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவருமான அஷ்ஷேக் எம்.ஐ. அமீர் (நழீமி) நிகழ்த்தினார்.

நூலாசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் சிறப்புரையாற்ற, அம்பாறை மாவட்ட றாபிததுன் நழீமிய்யீன் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.எம் இஸ்ஹாக் (நழீமி) நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் அம்பாறை மாவட்ட றாபிததுன் நழீமிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், முன்னாள் மாகாண செயலாளர் எம்.எம். நஸீர், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ காதர் உள்ளிட்ட கல்விமான்கள், உலமாக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805511

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time