உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம்; ஹரீஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு மீண்டும் நீதிமன்றில்.!!!

-நூருல் ஹுதா உமர்-

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற முஸ்லிம் பெண்களின் ஆடை அணியும் உரிமை தொடர்பான விவகாரத்தில், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிட்டு அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) மட்டக்களப்பு நீதிவான் அண்ணத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்கில் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான இந்த விவகாரம், தனிநபர் கருத்து வெளியீட்டைத் தாண்டி, சிறுபான்மை சமூகங்களின் மத மற்றும் பண்பாட்டு உரிமைகள் தொடர்பான பரந்த சமூக விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1184152

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time