உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காங்கேயனோடை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக காணப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பஸ் சேவை நீண்ட நாள் முயற்சியின் பின்னர் இன்று சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.ரஸீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு பஸ் போக்குவரத்து நிலைய முகாமையாளர் ஸ்ரீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பஸ் சேவையை ஆரம்பித்து வைத்ததோடு பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ் பஸ் சேவையானது தினமும் அம்பலாந்துறையில் இருந்து காங்கேயனோடை, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்றடையும்.

இப்பிரதேச மக்கள் பல ஆயிரம் ரூபாக்கள் மற்றும் நேர விரயம் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் பலரது முயற்சியில் இவ் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081160

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time