உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடியில் பள்ளிவாயல்களுக்கு ஈத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு.!!!

சவூதி அரேபியா அன்பளிப்புச் செய்த ஈத்தம் பழங்கள் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனைப் பற்று, மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச பள்ளிவாயலுக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஈத்தம் பழங்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் வைத்து அந்தந்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்த ஈத்தம் பழ விநியோகம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலக பொறுப்பதிகாரி சியாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் அவர்களினால் ஒரு பள்ளிவாயலுக்கு 18 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர் பர்ஹான் மற்றும் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் உப தலைவர் வஹாப் உட்பட பள்ளிவாயல்களின் பிரிதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081151

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time