உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஐந்து வயது சிறுவனை நடுவீதியில் தள்ளிவிட்டு தப்பியோடிய இளைஞர்கள்; காத்தான்குடி பொலிஸாரினால் கைது.!!!

(ஜே.கே)

ஐந்து வயது பாலகனை நடுவீதியில் வைத்து தாக்கிய இரு இளைஞர்கள் காத்தான்குடி பொலிசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம்.ரத்னநாயகா தெரிவித்தார்.

நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூராணியா வீதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பாலர் வகுப்பில் கல்வி பயிலும் ஐந்து வயது சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் வேகமாக வந்து தாக்கி வீதியில் தள்ளிவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருந்த நிலையில் இன்று காலை காத்தான்குடி பொலிசார் குறித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி வீதியில் தள்ளிவிடப்பட்டு காயம் அடைந்த சிறுவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரை அநியாயமான முறையில் வீதியில் தள்ளிவிட்ட இளைஞர்கள் இருவர் நேற்று தலைமறைவாக இருந்தனர் இன்று (04) காலை பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தள்ளிவிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

16 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்களும் தற்போது காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081071

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time