உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஆசனப்பட்டியை மீறி பயணிகளை ஏற்றினால் சட்ட நடவடிக்கை; காவல்துறை கடும் எச்சரிக்கை.!!!

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி வசதி இல்லாத இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள், ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆசனப்பட்டி இருந்தால் இருவர் மட்டுமே

வாகனத்தின் பின்புற இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தால், அந்த இருக்கையில் இரு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசனப்பட்டி இல்லாத நிலையில், மூன்றாவது பயணி ஒருவர் இருவருக்கும் இடையில் அமர்ந்து பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி காவல்துறை மாஅதிபர் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பே முக்கியம்

அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது, வாகனங்களில் உள்ள ஆசனப்பட்டிகளின் எண்ணிக்கையை மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் காவல்துறை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

ஆசனப்பட்டி வசதி உள்ள இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அமர்த்தி, வீதி பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215616

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time