உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் அபாயம்; பொதுமக்கள் அவதானம்.!!!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (14) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவித்தல், இன்றிரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கங்களினால் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215598

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time