உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்; இலங்கை வர முயன்ற இந்தியச் சிறுவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி.!!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கை கடற்படையினர் மன்னாரில் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த சிறுவனுக்கு, பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக கிளிநொச்சி – முளங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலியின் அழைப்பை ஏற்று அவரை நேரில் சந்திப்பதற்காக இலங்கைக்கு வர சிறுவன் திட்டமிட்டுள்ளார். சட்டவிரோதமாக கடல் வழியே இலங்கைக்கு அழைத்துவர தேவையான பணம் தன்னிடம் இல்லாத நிலையில், தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் பயணக் கட்டணமாக வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து படகோட்டி சிறுவனை இலங்கைக்கு அழைத்து வந்து, மன்னார் தம்மன்னா கடற்படை முகாமின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஆதாமின் பாலம் பகுதியில் உள்ள 6ஆம் மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி மாலை, குறித்த பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்படையினர், மணல் திட்டில் சிறுவன் ஒருவர் தனியாக நிற்பதை அவதானித்து சந்தேகமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவனை மீட்ட கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் இலங்கைக்கு வந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்பின் தெரியாத நபர்களுடன் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக கடல் வழியே எல்லை தாண்டி பயணிப்பது உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215600

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time