ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவு.!!!
• ரவூப் ஹக்கீம் மீண்டும் கட்சித் தலைவராக ஏகமனதாக தெரிவு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (15) மாலை ஏறாவூர் கோல்ட் அவென்யூ மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கட்சியின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு ரீதியான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.