உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

குற்றப் புலனாய்வுத் துறையில் முக்கிய மாற்றம்; புதிய இயக்குநராக ரோஷன் அமரசிங்க நியமனம்.!!!

இலங்கை பொலிஸ் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) புதிய இயக்குநராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரோஷன் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநராகப் பணியாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ரோஷன் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, DIG பதவி உயர்வு பெற்ற ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்து செயற்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய இயக்குநராக SSP ரோஷன் அமரசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215573

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time