உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மருதமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்தார் வைத்தியர் எஸ்.எம்.சபா.!!!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனையின் முதலாவது சிறுவர் வைத்திய நிபுணராக சதுருத்தீன் முஹம்மது சபா தெரிவாகியுள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி வைத்தியசாலை, மற்றும் பல வைத்தியசாலைகளில் சேவையாற்றி வந்த நிலையில் தற்போது சிறுவர் வைத்திய நிபுணராக தெரிவாகியுள்ளார்.

பெரியநீலாவனை ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று பின்னர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் உயர்கல்வியை கற்ற இவர் 2000ம் ஆண்டு ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக வைத்தியத் துறைக்கு தெரிவானார்.

பின்னர் 2015ல் பட்டப்பின் படிப்பு Post graduate Diploma in Child Health பட்டத்தை பூர்த்தி செய்ததுடன் 2015ல் வைத்திய நிபுணர் தெரிவு பரீட்சையிலும் சித்தியடைந்தார். தற்போது இவர், Doctor of Medicine in paediatric இறுதி பரீட்சையில் சித்தியடைந்து சிறுவர் வைத்திய நிபுணராக தெரிவாகியுள்ளார்.

மருதமுனை ,பெரியநீலாவணையில் பிரபலமான சிறுவர் வைத்தியர் என்பதுடன் இன மத பேதமின்றி எல்லோரிடமும் சகஜமாக நட்புடன் பழகக் கூடிய டொக்டர் எஸ்.எம்.சபா, மருதமுனையை சேர்ந்த சதுருத்தீன் – ஆசரா தம்பதிகளின் மூத்த மகனும் மருதமுனையின் பிரபல வர்த்தகர் அல்ஹாஜ்.எம்.ஐ.ஏ. பரீட் அவர்களின் மூத்த மருமகனுமாவார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081139

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time