உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ரூ.45 மில்லியன் பெறுமதியான நவீன கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு.!!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.45 மில்லியன் பெறுமதியான இரண்டு நவீன Argon–YAG Laser இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னணி கண் சிகிச்சை மையங்களில் ஒன்றாகத் திகழும் இவ்வைத்தியசாலையில், கடந்த ஆண்டில் 11,722 கண்புரை அறுவைச் சிகிச்சைகள், 2,299 ஏனைய கண் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 62,478 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த Argon மற்றும் YAG Laser இயந்திரங்கள் செயலிழந்ததால், பல நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக பிற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த அவசரத் தேவையை உணர்ந்து, அமெரிக்காவில் மயக்கமருந்து நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் தேவேந்திரன், தனது தாயாரின் நினைவாக IMHO–USA அமைப்பின் ஊடாக ரூ.45 மில்லியன் பெறுமதியான இரண்டு நவீன Argon–YAG Laser இயந்திரங்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த உபகரணங்கள் மூலம் கண் நோயாளிகளுக்கான லேசர் சிகிச்சைகள் விரைவாகவும் தரமான முறையிலும் வழங்கப்படுவதுடன், வெளி வைத்தியசாலைகளுக்கான பரிந்துரைகளும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, இந்த அரிய அன்பளிப்பை வழங்கிய டாக்டர் தேவேந்திரன் மற்றும் IMHO–USA அமைப்பிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை வட மாகாண மக்களின் கண் சிகிச்சை சேவையை மேலும் உயர்த்தும் முக்கியமான பங்களிப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066965

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time