உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

முத்துராஜவெல–கட்டுநாயக்க விமான எரிபொருள் குழாய் திட்டம் இன்று ஆரம்பம்.!!!

• ஜனாதிபதி தலைமையில் 21 கி.மீ. புதிய குழாய் பதிக்கும் பணிகள் முன்னெடுப்பு.

முத்துராஜவெல முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்லும் 21 கிலோமீற்றர் நீளமான புதிய குழாய் பாதையை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று (02) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனுடன், தலா 40,000 கனமீற்றர் கொள்ளளவைக் கொண்ட மூன்று புதிய எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கும் பணிகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தேவையான விமான எரிபொருள் விநியோக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தத்தை 40.84 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 8,548.75 மில்லியன் ரூபாய் மதிப்பில் வழங்குவதற்கு கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய நேரடி குழாய் பாதை அமைக்கப்படுவதன் மூலம், இடைத்தரகர்கள் மற்றும் போக்குவரத்து தடைகள் இன்றி விமான எரிபொருளை பாதுகாப்பாகவும் குறைந்த செயற்பாட்டுச் செலவிலும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு தொடர்ச்சியாக விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், விமான நிலையத்தில் எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கான சேமிப்புத் திறன் அதிகரிக்கப்படுவதால், சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும் என எரிசக்தித் துறை எதிர்பார்க்கிறது.

இந்தத் திட்டம் நாட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோக உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215626

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time