நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்: ஏர்பஸ் வழக்கில் ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்.!!!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.