உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கை தூதரக சேவைகளில் புதிய மாற்றம்; டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியத்துவம்.!!!

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் டிஜிட்டல் பரிமாற்றக் குழு, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் முதன்முறையாகக் கூடியது.

இதன்போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரகப் (கொன்சியூலர்) பிரிவை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் துணைத் தூதரகப் பிரிவுகளை டிஜிட்டல் மயப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களை தூதரகங்களுடன் இணைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.கே.டி. குமாரசிறி, முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுதந்த கனேகமஆராச்சி, டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி மனோஜ் கமகே மற்றும் GovTech Sri Lanka நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்றப் பிரிவுத் தலைவர் Michael Helm உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215595

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time