மஹிந்த ராஜபக்சவுடன் புதிய சீனத் தூதுவர் சந்திப்பு; வாழ்த்து தெரிவித்த மஹிந்த.!!!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்று (09) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நட்புரீதியான சந்திப்பாக இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து இலங்கைக்கான சீனத் தூதுவராக பொறுப்பேற்றுக்கொண்ட வேய் ஹுவாசியாங்கிற்கு, மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டிருந்தார்.