உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கை அன்னாசிப்பழங்களுக்கு பாகிஸ்தானில் புதிய சந்தை வாய்ப்பு.!!!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நாடு ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்றுமதி முயற்சி இலங்கையின் பழ ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதுடன், நாட்டின் விவசாய மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214790

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time