உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

காத்தான்குடி வர்த்தகர்களுக்கான புதிய டிஜிட்டல் சந்தை அறிமுகம்.!!!

● kkybazar.lk இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.

காத்தான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார வர்த்தகர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிட்டல் வர்த்தக உலகுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட kkybazar.lk Community Marketplace இணையத்தளம் இன்று (16) காத்தான்குடி அப்ரார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

AUA Connect (Pvt) Ltd நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் அறிமுக நிகழ்வில், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ். எச். அஸ்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தொழில்முயற்சியாளர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அதன் சேவைகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான நேரடி விளக்கக் காட்சிகளும் (Live Demonstration) இடம்பெற்றன.

காத்தான்குடி மற்றும் சுற்றுப்புற வர்த்தக சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள kkybazar.lk, உள்ளூர் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை இணையவழி சந்தையில் இலவசமாக காட்சிப்படுத்தக்கூடிய சமூக வர்த்தக தளமாகும்.

இந்த தளத்தின் மூலம் விற்பனையாளர்கள் எவ்வித Listing Fee அல்லது Commission இன்றியும் தங்களது வணிக தகவல்களை பதிவேற்ற முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் நேரடியாக WhatsApp வழியாக விற்பனையாளர்களை தொடர்புகொண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றியவர்கள், இன்றைய உலகில் டிஜிட்டல் வர்த்தகம் ஒரு தேர்வாக இல்லாமல் ஒவ்வொரு வர்த்தகருக்கும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினர். அந்த வகையில், kkybazar.lk காத்தான்குடி வர்த்தகர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய தளமாக உருவெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

இதேவேளை, AUA Connect (Pvt) Ltd நிறுவனம் காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களையும் kkybazar.lk இணையத்தளத்தில் பதிவு செய்து தங்களது வணிகங்களை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

“உள்ளூர் வர்த்தகத்தை டிஜிட்டல் உலகுடன் இணைப்போம்; காத்தான்குடியை உலக சந்தைக்கு கொண்டு செல்வோம்.”

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010643

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time