உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

புதிய மெட்ரோ பேருந்து சேவை ஆரம்பம்; நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.!!!

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தில் 7 வீதிகளில் 112 மெட்ரோ பேருந்துகள் இன்று (29) முதல் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு தலங்கமை மெட்ரோ பேருந்து நிலைய வளாகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றதுடன், இதில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

நவீன மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நவீன பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், வசதியான 100 தாழ்தளப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, இலங்கைக்கு கிடைத்த 104 பேருந்துகளும், ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 8 பேருந்துகளும் உள்ளடங்கலாக மொத்தம் 112 மெட்ரோ பேருந்துகள் இன்று முதல் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்து சேவை மூலம் கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதுடன், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215567

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time