உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

புதிய வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள்; மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற தகடுகள்.!!!

புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன. கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களும் இதற்குள் அடங்கும்.

மின்சார வாகனங்களை வருமான அனுமதிப்பத்திரங்களை பரிசோதிக்கும் போது பொலிஸாரால் இலகுவாக அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய வாகனங்களுக்கு வழக்கம்போல் முன்புறத்தில் வெள்ளை நிறமும், பின்புறத்தில் மஞ்சள் நிறமும் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படும்.

மேலும், 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215586

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time