உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

2027 முதல் அனைத்து முன்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்; கல்விச் சீர்திருத்தம் அறிமுகம்.!!!

நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் 2027ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

இன்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளில் வெவ்வேறு கல்வி முறைகளின் கீழ் தனித்தனியாக கற்பிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஒரே கல்வி முறையின் கீழ் முன்பள்ளிக் கல்வியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் முன்பள்ளிக் கல்வியில் ஒரே தரத்தையும் ஒரே கல்வி அணுகுமுறையையும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214779

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time