கொழும்பில் இணையவழி நிதி மோசடி: 21 வெளிநாட்டவர்கள் கைது.!!!
கொழும்பு, மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 21 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் சீனப் பிரஜைகள், 6 பேர் பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் 3 பேர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.