உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

அரசியலைத் தவிர்த்து விவசாயத்தில் முழுநேரமாக ஈடுபடும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.!!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விவசாய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது பெரும்பாலான நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், முக்கியமான மத நிகழ்வுகள், திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய முக்கிய நிகழ்வுகளுக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஏற்று அவற்றிலும் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலைத் தவிர்த்து விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், தாமும் உண்மையிலேயே தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் தனக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்றும் வயல் நிலமும் இருப்பதாகக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவற்றில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி, வாசிப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளில் தனது தற்போதைய காலத்தைச் செலவிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292523

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time