மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்: ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்.!!!
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா இன்று (03) தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள குவாசம் தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, அமெரிக்காவில் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.