உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு: புதிய கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்.!!!

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் நிரந்தர தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான புதிய கொள்கைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய அளவில் சிறந்த திறமைகளைக் கொண்ட வீரர்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிலையான தொழில் வாய்ப்புக்கள் நாட்டில் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக, பல வீரர்கள் பொருளாதாரச் சுமை மற்றும் எதிர்காலப் பாதுகாப்புக் கருதி, தமது விளையாட்டுத் துறையிலிருந்து பாதியிலேயே விலகிச் செல்லும் நிலை காணப்படுகிறது. இது இலங்கையின் சர்வதேச போட்டித்திறனைப் பெருமளவு பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இவ்வாறான வீரர்களுக்கு முப்படைகளில் மாத்திரமே சில வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்தன. விளையாட்டுத் துறை அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்களிலும் மிகக் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே காணப்பட்டன. இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்கள் வீரர்களின் நீண்டகாலத் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போதுமானதாக இல்லை என அரசு கருதுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806172

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time