உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு – 150 மில்லியன் ஒதுக்கீடு.!!!

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரியல் அட்மிரல் ஷெமல் பெர்னாண்டோ சகிதம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அதேவேளை சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானம் மற்றும் பௌசி விளையாட்டு மைதானம் என்பவற்றின் நிலைமைகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த காலங்களில் அபிவிருத்தி பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்ற இவ்விளையாட்டு மைதானங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஆதம்பாவா எம்.பி. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081090

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time