உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சைகை மொழியில் பொலிஸ் உதவி; செவித்திறன் குறைபாடுடையோருக்கு 119 புதிய சேவை.!!!

செவித்திறன் குறைபாடுடைய நபர்கள் அவசர காலங்களில் இலங்கை பொலிஸைத் தொடர்புகொள்வதற்கும் முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கும் WhatsApp ஊடாக விசேட வசதி ஒன்று நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்குக்குப் பதிலாக, செவித்திறன் குறைபாடுடையோருக்கென தனியான குறுந்தகவல் இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக WhatsApp சேவையைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையைப் பயன்படுத்துவது எவ்வாறு?

முதலில் 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை கைப்பேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், WhatsApp ஊடாக அந்த இலக்கத்துக்கு ஒலி அழைப்பொன்றை மேற்கொள்ள வேண்டும். அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர், கைப்பேசியில் கிடைக்கும் இணைப்பை அணுகுவதற்காக மீண்டும் WhatsApp செயலிக்குள் சென்று “Join Browser” என்பதைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து “Join Meeting” என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் 119 அவசர அழைப்புப் பிரிவுடன் காணொளி அழைப்பு ஊடாக இணைந்துகொள்ள முடியும்.

சைகை மொழியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி

119 அவசர அழைப்புப் பிரிவில் பணியாற்றும் சைகை மொழியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி ஒருவர் காணொளி அழைப்பிற்கு பதிலளிப்பார்.

அதன்போது பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, அவசர நிலைமை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வசதி, செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு அவசர காலங்களில் பொலிஸ் சேவையை எளிதாகவும் விரைவாகவும் அணுகுவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215589

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time