உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பொலிஸ் நவீனமயமாக்கல் மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வு திட்டங்களை துரிதப்படுத்த ஜனாதிபதி உத்தரவு.!!!

பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனானதும் தரமானதுமான சேவையை வழங்கும் வகையில், இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் தீவிர பங்களிப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் உடனடியாக ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின் கீழ் கொண்டு வருவதுடன், புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,000 மில்லியன் மூலதனச் செலவினத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

இதன்படி, இலங்கை பொலிஸின் போதைப்பொருள் பணியகத்தினால் ரூ.417.48 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கண்டறிதல் மற்றும் சுற்றிவளைப்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், ரூ.13.54 மில்லியன் செலவில் கல்லடி பொலிஸ் பயிற்சி மையத்தை புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் ரூ.288.15 மில்லியன் செலவில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொலிஸ் நிலையங்களின் அபிவிருத்தி

நாடு முழுவதும் 608 பொலிஸ் நிலையங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருவதால், இதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட்டு வருவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த செலவைக் குறைக்கும் வகையில் பொலிஸாருக்கான நிரந்தர கட்டிடங்களை அமைப்பதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பொலிஸ் வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

உத்தேச பொலிஸ் தலைமையகக் கட்டிடம், பொலிஸ் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மிரிஹான பொலிஸ் விளையாட்டு வளாகம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வெலிகம மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் சில மாதங்களில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கல்

இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம், பொலிஸ் சீருடைகளை புதுப்பித்தல் மற்றும் அதிக பணிச்சுமையால் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

பொலிஸ் அதிகாரிகளிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விழிப்புணர்வு திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.

அனைத்து புனர்வாழ்வு திட்டங்களும் ஒருங்கிணைப்பு

சமூக சேவைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், நீதி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் தனித்தனியாக முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு திட்டங்களை ஒருங்கிணைத்து, தீவு முழுவதும் ஒரே முறையான புனர்வாழ்வு செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067011

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time