உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஞானசார தேரரின் ஜனாதிபதி மன்னிப்பு இரத்து; உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு.!!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட பலர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கின் பின்னணி

2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலையானார்.

எனினும், குறித்த மன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிட்டு, அதனை செல்லாது என அறிவிக்கக் கோரி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசியல் மற்றும் சட்டத் துறைகளில் மேலும் பரவலான விவாதங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215590

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time