உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கட்டார் நோக்கி பிரதமர் பயணம்; முன்னாள் அமீரின் மறைவுக்கு இலங்கையின் இரங்கல்.!!!

கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவிற்கு இலங்கை அரசாங்கத்தினதும், மக்களினதும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (14) செவ்வாய்க்கிழமை மாலை டோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனும் கட்டார் பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நீண்ட கால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மீள உறுதிப்படுத்துவதற்கும் கட்டார் இராச்சியத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விஜயமானது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் நிலவும் நெருக்கமான, சினேகபூர்வ உறவினைப் பிரதிபலிப்பதுடன், கட்டார் இராச்சியத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066938

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time