பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் சட்டக் கல்லூரிக்கு விஜயம்.!!!
பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, 2026 செப்டெம்பர் 2ஆம் திகதி ஜிக்மே சிங்கே வாங்சுக் சட்டக் கல்லூரிக்கு (JSW Law) விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, சட்டக் கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சட்டத் துறையின் தொழில்முறை வளர்ச்சிக்காக கல்லூரி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் அறிந்துகொண்டார்.
மேலும், இலங்கை மற்றும் பூட்டானின் சட்ட முறைமைகள் மற்றும் நீதித்துறைப் பாரம்பரியங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
சட்டக் கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, கல்விசார் பரிமாற்றங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை கல்வி தொடர்பான அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.








