உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பூட்டான் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி.!!!

விழிப்புணர்வுமிக்க உணவு முறைமைகள் தொடர்பான உலகளாவிய மாநாட்டில் (Global Summit on Conscious Food Systems) பங்கேற்பதற்காக பூட்டானுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 05 வரை இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார்.

இதன்போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக் அவர்களை சந்தித்த பிரதமர், பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் தொப்கே மற்றும் கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் டே தபா ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சிரேஷ்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

தமது விஜயத்தின் போது திம்புவில் அமைந்துள்ள தாஷிச்சோ சோங் விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அரச ஆடை அருங்காட்சியகம், செம்தோகா சோங் கோட்டை மற்றும் பாரோவில் உள்ள பூட்டான் தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் பார்வையிட்டார்.

பூட்டானுக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயம், இலங்கை–பூட்டான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், கல்வி, கலாசாரம், சுற்றுச்சூழல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரோயல் பூட்டான் எயர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான KB 200 விமானம் மூலம் பிரதமர் மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215583

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time