உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதம் நீடிப்பு – ஜனவரி 28 முதல் புதிய கட்டளைகள் அமுல்.!!!

நாட்டில் கடந்த நவம்பர் 28 ஆம் திகதியிலிருந்து நடைமுறையில் உள்ள பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 முதல் புதிய அவசரகால கட்டளைகள் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகால நிலைமையின் நோக்கம், நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்தல், அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால கட்டளைகள், தற்போது ஜனவரி 28 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டு, அதற்குரிய அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு, புதிய அவசரகால கட்டளைகளுடன் இணங்க, முன்னர் நடைமுறையில் இருந்த பல கட்டளைகளும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவசரகால கட்டளைகள் அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவற்றுக்கு முரணாக செயல்படும் நபர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810786

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time