உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இணையவழி உடனடி கடன் பெறுவோர் அவதானம்; பொலிஸார் எச்சரிக்கை.!!!

• அதிக வட்டி அறவிடும் நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.

இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலிகள் ஊடாக உடனடி கடன்களைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு இணையவழியாக வழங்கப்படும் உடனடி கடன்களை மீள அறவிடும்போது அதிக வட்டி வீதங்கள் அறவிடப்படுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலிகள் ஊடாக இணையவழியில் உடனடி கடன்களை வழங்கும் சில நிறுவனங்கள், அவற்றை மீள அறவிடும்போது அதிக வட்டி வீதங்களை அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கடன் பெறுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கடன்களைப் பெறுவதன் காரணமாகவே பின்னர் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த கடன் செயலிகளின் நிபந்தனைகளில், கடன் தொகையை மீளச் செலுத்தும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் தொடர்பான பொறுப்புகளை கடன் பெறுபவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், பலர் குறித்த நிபந்தனைகளை முறையாக வாசித்து புரிந்துகொள்ளாமல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கடன்களைப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி செயலிகள் ஊடாக கடன் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாகப் புரிந்துகொண்ட பின்னரே கடன் பெறுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம் ஏற்படக்கூடிய நிதியிழப்புகள் மற்றும் ஏனைய அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதால், பொதுமக்கள் இணையவழி உடனடி கடன் சேவைகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215100

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time