ரயில் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு; இன்று இரவு 6 ரயில் சேவைகள் ரத்தாகலாம்.!!!
நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்படவுள்ள ரயில், 8.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்படவுள்ள ரயில் மற்றும் 9.30 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கவுள்ள இரவு அஞ்சல் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது தொடர்பில் ரயில்வே திணைக்களமோ அல்லது போக்குவரத்து அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வமான உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.
எனவே, பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன்னர் ரயில் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.