உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கடற்படை மரியாதைகளுடன் ஓய்வு பெற்றார் ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய.!!!

• 33 வருடங்களுக்கும் அதிகமான சேவையை நிறைவு செய்து விடைபெற்றார்.

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

இலங்கை கடற்படையில் 33 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தை நிறைவு செய்த ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய, இன்று (16) புதன்கிழமை கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரியவுக்கு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியத்தினால் கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கடற்படை பாரம்பரியத்திற்கு அமைவாக விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அவருக்கு கௌரவம் செலுத்தப்பட்டது.

பின்னர், சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்டபோது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் கடற்படை பாரம்பரிய முறைப்படி அவருக்கு வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்தனர்.

33 வருடங்களுக்கும் அதிகமான சிறப்பான சேவை

ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய, 1992ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது மாணவர் அதிகாரி ஆட்சேர்ப்பின் மூலம் இலங்கை கடற்படையில் இணைந்தார்.

தனது 33 வருடங்களுக்கும் அதிகமான சேவைக்காலத்தில், கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் பொறுப்பு அதிகாரியாகவும், பல்வேறு கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கடற்படை ஒழுக்காற்று அதிகாரி, திருகோணமலை வடக்கு கடற்படை கட்டளை அதிகாரி, வணிக வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவின் பணிப்பாளர், கடற்படை கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், பாரப்பற்ற நிர்வாக பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படைப் பிரிவு கொடி அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

இலங்கை கடற்படையில் நீண்டகாலம் பல்வேறு பொறுப்புகளை வகித்து சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரியான ரியர் அட்மிரல் தனேஷ் பத்பேரிய, கடற்படை மரியாதைகளுடன் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215603

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time