உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

வாகன இறக்குமதி தடை தளர்வு: அரச வருமானத்தில் 27% அதிகரிப்பு.!!!

நீண்ட காலத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்பட்டதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கம் பெற்ற மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 2.956 டிரில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீத அதிகரிப்பாகும்.

மேலும், 2026 ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள 5.3 டிரில்லியன் ரூபா வருமான இலக்கில் 55.8 சதவீதம் முதல் ஆறு மாதங்களிலேயே எட்டப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மானியங்களைத் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானமும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட அரச வருமானம், 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, அரசாங்கத்தின் வரி வருமான அதிகரிப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1097644

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time