ஸ்பெயின் அணியின் வெற்றி புகைப்படத்தில் டிரம்ப் நீக்கம்; FIFA விழாவில் ஏற்பட்ட சர்ச்சை.!!!
அமெரிக்காவில் நடைபெற்ற FIFA கோப்பை வழங்கும் விழாவின் போது ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கப்பட்டுள்ளார்.
ஊடகத் தகவல்களின்படி, அதிகாரப்பூர்வ புகைப்படம் எடுக்கும் முன் மேடையை விட்டு வெளியேறுமாறு FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, டிரம்பை சமாதானப்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், கோப்பை வழங்கும் நிகழ்வின் போது ஸ்பெயின் அணி வீரர்களுக்கு அருகிலேயே டிரம்ப் தொடர்ந்து நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலையைத் தொடர்ந்து, ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் வெளியிட்ட வெற்றிப் புகைப்படத்தில் டிரம்பின் உருவம் அகற்றப்பட்டது.
அதேபோன்று, FIFA வெளியிட்ட புகைப்படப் பதிப்பிலும் டிரம்ப் இடம்பெறாத வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FIFA வெற்றி விழாவில் ஏற்பட்ட இந்த புகைப்பட சர்ச்சை தற்போது சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

