மின்வெட்டு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!
மின்சார விநியோகத்தை தடையின்றித் தொடர்வதில் எந்தவித தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.