உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

தேசியப் பட்டியல் விவகாரத்தில் புரளிகள்; வதந்திகளுக்கு அலட்டிக் கொள்ளப் போவதில்லை – ரவூப் ஹக்கீம்.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற  உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம் பற்றி ஆராயப்பட்டதாகவும், அதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டு, விஷமத்தனமான வதந்திகள் பொறுப்பற்ற விதத்தில் சில சமூக வலைத்தளங்களாலும், தனிப்பட்ட நபர்களாலும், பரப்பப்பட்டும், பகிரப்பட்டும் வருவதையிட்டு விசனம் தெரிவித்த கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவற்றிற்காக அலட்டிக் கொள்ளப் போவதில்லை  எனவும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முற்பகல்  நடைபெற்ற  பிரஸ்தாப  உயர்பீடக் கூட்டத்தில் சமகால அரசியல் கள நிலைவரம், கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத்  தலைவர்  முன்னாள் அமைச்சர்  எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின்  26 ஆவது  நினைவு தின நிகழ்வு,பேராளர் மாநாடு என்பன பற்றியே கலந்துரையாடப்பட்டதாகவும்,கட்சியின்  தேசிய பட்டியல் உறுப்பினர்  பற்றி அதில்  பேசப்படவில்லை என்றும்   அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக,மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் சுயநல நோக்கோடு, அவ்வாறு சில சமூக வலைத்தளங்களாலும் ,தனி மனிதர்களாலும் புனையப்பட்டு, பகிரப்படும் புரளிகளையும், வதந்திகளையும்   அறவே நம்ப வேண்டாம்  எனவும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் சரியான முடிவு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215570

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time