அதிகபட்ச சில்லறை விலையை மீறிய விற்பனை; வர்த்தக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அபராதம்.!!!
அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தல்கள் மற்றும் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த இரண்டு வர்த்தக நிறுவனங்களுக்கு நீதிமன்றங்களால் மொத்தம் 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.
இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமைக்காக, பதுளை நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.