ஷிரந்தி ராஜபக்ச இலங்கைக்கு திரும்பி சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் – எரங்க குணசேகர.!!!
சிங்கப்பூரில் இருந்து நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகத் தவறி வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, உடனடியாக இலங்கைக்கு திரும்பி சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஷிரந்தி ராஜபக்ச இலங்கைக்கு திரும்பி சட்ட நடைமுறைகளுக்கு இணங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியில் பெறப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அவை தொடர்பான அனைத்து விடயங்களும் நீதித்துறை செயல்முறையின் ஊடாக ஆராயப்படும் எனவும், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் உண்மைகள் வெளிப்படும் எனவும் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.