ஷிரந்தி ராஜபக்ஷவின் அதிகாலை சிங்கப்பூர் பயணம் – செப்டம்பர் 24 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணியளவில், சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ-469 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.