‘SILVER DAWN’ சொகுசு பயணிகள் கப்பல்: 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.!!!
சுமார் 700 அடி நீளமுடைய அதி சொகுசு பயணிகள் கப்பலான ‘SILVER DAWN’ இன்று (10) வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் இலங்கைக்கான இயக்க முகவராக Colombo Shipping Solutions Pvt Ltd நிறுவனம் செயல்படுகிறது.
கடந்த 07ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த சொகுசு கப்பல், நேற்று (09) வியாழக்கிழமை காலி துறைமுகத்திலும் தரித்து நின்றது.
நான்கு நாட்கள் இலங்கையில் தங்கி நிற்கும் ‘SILVER DAWN’ கப்பல், இன்று இரவு நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

