உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

பொதுமக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்.!!!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவித்தலில், இணையத்தைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் ஊடாக வரும் சந்தேகத்திற்கிடமான முதலீட்டு அழைப்புகள், பரிசு அல்லது லாபம் கிடைக்கும் எனக் கூறும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது.

தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள், OTP குறியீடுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளாமை.

சமூக ஊடகங்களில் காணப்படும் போலி கணக்குகள், போலி நிறுவனங்கள் மற்றும் போலி இணைய தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது.

சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் (links) மற்றும் செயலிகள் (apps) மீது கிளிக் செய்வதை தவிர்ப்பது.

மேலும், சமூக ஊடக நிதி மோசடிகள் தொடர்பில் 2026 ஆம் ஆண்டிலும் பொதுமக்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இவ்வகை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக திட்டமிட்ட முறையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நிதி மோசடிகள் அல்லது சமூக ஊடக குற்றச்செயல்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது சைபர் குற்றப் பிரிவிற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 870258

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time