சர்வதேச நாணய நிதியம் ஒப்புதலுக்கு இலங்கைக்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள்; 345 மில்லியன் டொலர் நிதியுதவி எதிர்பார்ப்பு.!!!
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையே ஏற்பட்டுள்ள பணியாளர் மட்ட உடன்பாட்டிற்கு (Staff-Level Agreement) IMF நிர்வாக சபையின் ஒப்புதல் கிடைப்பது இரண்டு முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை IMF திட்டத்தின் அளவுகோல்களுக்கு ஏற்ப நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களின் மறுஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதும் மற்றொரு முக்கிய முன்நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னர், IMF நிர்வாக சபையின் உத்தியோகபூர்வ ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் 7ஆவது தவணையாக சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை பெற்றுக்கொள்ள தகுதி பெறும்.
இதன் மூலம், IMF திட்டத்தின் அடுத்த கட்ட நிதியுதவியைப் பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் இலங்கை முன்னேறவுள்ளது.