உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

“இலங்கை தனியாக இல்லை; இந்தியா எப்போதும் துணை” – இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!!

இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தனது முதலாவது இலங்கை விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ராஜ்நாத் சிங், நேற்று (08) கொழும்பில் நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேகமாக வளர்ச்சியடையும் இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2 டிரில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து சுமார் 4 டிரில்லியன் டொலராக இரட்டிப்படைந்துள்ளதாகவும், 2026–2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 79 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், மொபைல் தொலைபேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையிலும் முன்னேற்றம்

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு அமைச்சர், 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.600 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது ரூ.39,000 கோடி என்ற வரலாற்று மட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்திய பாதுகாப்புத் துறைக்கான வரவு–செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ.7.25 இலட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளமை, சுயசார்பு பாதுகாப்புத் துறையை நோக்கிய இந்தியாவின் பயணத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் இலங்கையின் அமைச்சரவை அமைச்சர் சரோஜா சாவிதிரி போல்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215589

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time