உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி. அப்துல் வாஹித் ராஜினாமா.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில், நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் வாஹித்தின் ராஜினாமாவைத் தொடர்ந்து, 10ஆவது நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5)ஆம் பிரிவுக்கு அமைவாக, இந்த வெற்றிடம் தொடர்பான அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காலியாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் வாஹித்தின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் குறித்த தேசியப் பட்டியல் இடத்திற்கு அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215598

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time