உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

இலங்கைக்கு ஜப்பானிடமிருந்து 7 தாழ்தள பேருந்துகள்; தூதுவர் உத்தியோகபூர்வ கையளிப்பு.!!!

ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 தாழ்தள பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பான் அரசாங்கம் மற்றும் யொகோஹாமா நகர மக்களின் கூட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்துகள், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமொட்டா (Akio Isomata) கலந்து கொண்டு, பேருந்துகளை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளித்தார்.

இந்த நன்கொடை மூலம் இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கு மேலும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215575

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time